/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
/
இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
ADDED : ஆக 22, 2025 01:35 AM
ஓசூர், ஓசூர், மூக்கண்டப்பள்ளி அருகே, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 9 இரவு, 35 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியதில் பலியானார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., சிலம்பரசன் புகார் படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல நேற்று முன்தினம் பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற அடையளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். மோரனப்பள்ளி வி.ஏ.ஓ., அன்பரசு புகார் படி, ஓசூர், ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.