/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு விபத்துகளில் கிருஷ்ணகிரியில் இருவர் பலி
/
வெவ்வேறு விபத்துகளில் கிருஷ்ணகிரியில் இருவர் பலி
ADDED : அக் 21, 2025 12:59 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரியை சேர்ந்தவர் மார்டின்,45; விவசாயி. நேற்று முன்தினம், தன் ஆம்னி வேனில் வரட்டனப்பள்ளிக்கு சென்று ஊருக்கு திரும்பியுள்ளார். இரவு, 7:00 மணியளவில் ராயப்பனுார் அருகே வரட்டனப்பள்ளி - கந்திகுப்பம் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், மார்டின் பலியானார். வேன் மோதியதில் அப்பகுதியில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் வழங்க வந்த பவுல்ராஜ், 35, என்பவரும் காயமடைந்தார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரி அடுத்த குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர் தனுஞ்சய், 32. கே.என்.போடூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் டிரைவாக பணிபுரிந்துள்ளார். நேற்று பணி முடிந்து வீட்டிற்கு ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இரவு, 7:30 மணியளவில் கே.என்.போடூர் அருகே வேப்பனஹள்ளி - பேரிகை சாலையில் சென்றபோது எதிரில் வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு இறந்தார். விபத்து குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.