தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்

கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்

கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்


ADDED : அக் 18, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., தண்டபாணி மற்றும் வருவாய்த்துறையினர், ராயக்கோட்டை சாலையில் உள்ள, அசோக் பில்லர் சர்க்கிள் பகுதியில், வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது, தமிழக அரசின் தடையை மீறி, சூளகிரியிலிருந்து பெங்களூருக்கு சட்டவிரோதமாக, தலா இரண்டரை யூனிட் எம்.சாண்ட் மற்றும் ஜல்லியை கடத்தி செல்வது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓசூர் டவுன் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., தண்டபாணி புகார்படி, லாரி டிரைவரான, சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த புளியம்பட்டி குடி தெருவை சேர்ந்த மாதேசன், 36, என்பவரை கைது செய்தனர். லாரி உரிமையாளரான, தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கே.மல்லாபுரம் வினோபாஜி தெருவை சேர்ந்த சரவணன், 46, என்பவரை தேடி வருகின்றனர்.

* ஓசூர் அடுத்த பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், தேவீரப்பள்ளியில் உள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்ட போது, டிப்பர் லாரியில் பேரண்டப்பள்ளியிலிருந்து பெங்களூருக்கு, 4 யூனிட் எம்.சாண்டை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார்படி, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us