ADDED : டிச 27, 2025 05:44 AM
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மஜித் தெருவை சேர்ந்தவர் சபியுல்லா, 53. ஆட்டோ டிரைவர்; நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில், அட்டகுறுக்கி அருகே ஆட்டோவில் சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஹீண்டாய் கார், ஆட்டோ பின்னால் மோதியது. இதில் சபியுல்லா படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகனசுந்தரம் விசாரிக்கிறார்.* அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால், 27. விவசாயி; யமகா பைக்கில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, நாட்-றாம்பாளையம் - அஞ்செட்டி சாலையில் சென்றார். நாட்றாம்பாளையம் கிருத்திகா பேக்கரி முன் சென்ற போது, பைக்குடன் கீழே தவறி விழுந்தார். இதில் பைக்கை ஓட்டி சென்ற சுரேஷ் ஜான்பால் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பஞ்சல்துணை கிராமத்தை சேர்ந்த தப்பக்குளி, 32, ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், பென்னாகரம் அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பினர். அங்கு சுரேஷ் ஜான்பால் உயிரிழந்தார்.
தப்பக்குளிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரிக்-கிறார்.

