/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்
ADDED : டிச 30, 2024 02:09 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பனமரத்துப்பட்-டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி விஜயா, 48. கடந்த, 26 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் கொடுத்த புகார்படி, ஊத்-தங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
*கெலமங்கலம் அடுத்த தாவரக்கரை பகுதியை சேர்ந்தவர் அச்சப்பா மகள் ரோஜா, 23. கர்நாடகா மாநிலம், பொம்மச்சந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 24 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ரோஜா திரும்பி வரவில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், திரு-வண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

