/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ் மீது டூவீலர் மோதி விபத்து 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட இருவர் பலி
/
அரசு பஸ் மீது டூவீலர் மோதி விபத்து 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட இருவர் பலி
அரசு பஸ் மீது டூவீலர் மோதி விபத்து 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட இருவர் பலி
அரசு பஸ் மீது டூவீலர் மோதி விபத்து 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட இருவர் பலி
ADDED : ஆக 28, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, அரசு பஸ் மீது மோதியதில், டூவீலரில், 'லிப்ட்' கேட்டு வந்தவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில், யானைக்கால் தொட்டி பிரிவு சாலை அருகே, நேற்று மாலை, 4:20 மணிக்கு, அரசு பஸ் பேரிகை நோக்கி சென்றது. பஸ்சை காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்த சஞ்சீவன், 29, ஓட்டினார். அப்போது எதிரே, கிருஷ்ணகிரி புதுப்பேட்டையை சேர்ந்த மணிவண்ணன்,62, மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கொரமடுகு கிராமத்தை சேர்ந்த முரளி,43, ஆகியோர், சுஜூகி அக்ஸஸ் -125 ஸ்கூட்டரில் வந்துள்ளனர்.
சாலை வளைவில், அரசு பஸ்சின் முன்பகுதியில் டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேப்பனஹள்ளி போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விபத்தில் பலியான மணிவண்ணன், வேப்பனஹள்ளியில் பத்திர விற்பனையாளராக இருந்தார். கர்நாடகா மாநிலம் பூதிக்கோட்டை கிராமத்திலுள்ள, தன் மகளை பார்த்து விட்டு, கிருஷ்ணகிரி நோக்கி வந்துள்ளார். அப்போது, கோலார் மாவட்டம் கொரமடுகு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி, வேப்பனஹள்ளி மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள தன் மனைவியை பார்க்க, அவரிடம், 'லிப்ட்' கேட்டு டூவீலரில் வந்துள்ளார் என தெரியவந்தது.
விபத்து நடந்த, சாலை வளைவின் இருபுறமும், புதர் மண்டி கிடப்பதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அதனால் அங்கு, அடிக்கடி விபத்து நடப்பதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.