/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மது பானம் கடத்திய இருவர் கைது
/
கர்நாடகா மது பானம் கடத்திய இருவர் கைது
ADDED : பிப் 17, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் போலீசார், சினரம்
பட்டி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர். அப்-போது அவ்வழியாக வந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், மாஸ்தியி-லிருந்து, அம்மாநில மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க, கடத்தி வருவது தெரிந்தது. ஸ்கூட்டரில் வந்த ராமன்தொட்டியை சேர்ந்த ஜெயராம், 26, மற்றும் முனிராஜ், 37, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 576 கர்நாடகா மது-பான பாக்கெட் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.