/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்
/
எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்
ADDED : ஆக 28, 2025 01:07 AM
ஓசூர், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மத்திகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, நாகொண்டப்பள்ளியிலிருந்து மத்திகிரிக்கு, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் குணசிவா, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். அவரது புகார் படி போலீசார், குருபட்டியை சேர்ந்த லாரி டிரைவரும், உரிமையாளருமான விஜய், 40, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கந்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., டேனியல்ராஜ் மற்றும் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், அவ்வழியாக வந்த லாரியில், பர்கூரிலிருந்து கந்திகுப்பத்திற்கு, ஒரு யூனிட் ஜல்லியை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார், லாரி டிரைவர் சிவா, உரிமையாளரான கம்மம்பள்ளியை சேர்ந்த சத்தியநாராயணன் ஆகிய, 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.