/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்கில் இருந்து விழுந்த டூவீலர் மெக்கானிக் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த டூவீலர் மெக்கானிக் பலி
ADDED : நவ 01, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக்கில் இருந்து விழுந்த டூவீலர் மெக்கானிக் பலி
கிருஷ்ணகிரி, நவ. 1-
கிருஷ்ணகிரி அருகிலுள்ள சுண்டேகுப்பம் மணிநகரை சேர்ந்தவர் காவேரி, 45, விவசாயி. இவரது மகன் கோகுல், 21. டூவீலர் மெக்கானிக். கோகுல் கடந்த, 30 நள்ளிரவு, 12:20 மணிக்கு, தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுங்சாலையில், ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். திம்மாபுரம் அடுத்த நேருபுரம் அருகே, டூவீலர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த கோகுல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாலை, 6:00 மணிக்கு இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார்,
விசாரிக்கின்றனர்.

