/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த டூவீலர்கள் அகற்றம்
/
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த டூவீலர்கள் அகற்றம்
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த டூவீலர்கள் அகற்றம்
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த டூவீலர்கள் அகற்றம்
ADDED : ஏப் 24, 2025 01:19 AM
காவேரிப்பட்டணம்:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த வாகனங்களை, டவுன் பஞ்., அலுவலர்கள் அகற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அம்ரூத் திட்டப்பணிகள் மந்தமாக நடப்பதையும், பஸ் ஸ்டாண்டில், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி உள்ளதையும் பார்த்து அதிகாரிகள், அலுவலர்களை கடிந்து கொண்டார். இதையடுத்து காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., பணியாளர்கள் நேற்று பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த டூவீலர்களை அலேக்காக துாக்கி பிக்கப் வேன்கள் மூலம், காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.
டூவீலர்களை நிறுத்தியவர்கள் உரிய ஆவணங்களை காட்டி, அபராதம் கட்டிய பின், வாகனங்களை பெற்று கொள்ளலாம் எனவும், மீண்டும் மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் வாகனங்களை நிறுத்தினால், உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்படும் எனவும், போலீசார் தெரிவித்தனர்.