ADDED : நவ 18, 2026 05:45 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை
அடுத்த, சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., இளையமூர்த்தி மற்றும்
போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, நார்சாம்பட்டி
அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா என்பவர்
சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்துார் செல்லும் மெயின்
ரோட்டில், சந்தேகத்திற்கு இடமான இருவர், காளையை பிடித்துச் செல்வதாக
தகவல் அளித்தார். ரோந்து போலீசார், உடனடியாக சம்பவ இடம் விரைந்து,
காளையை பிடித்துச் சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள்
முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்தனர். தொடர்
விசாரணையில் நார்சாம்பட்டியை சேர்ந்த அம்மு என்பவரின் காளையை திருடி
சென்றது தெரியவந்தது. அவர்கள் திருப்பத்துார் மாவட்டம்
குரும்பேரியை சேர்ந்த நவீன்குமார், 21, சந்தோஷ், 21, என தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
