/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே கார் மோதி விபத்து வடமாநில தொழிலாளர் இருவர் பலி
/
ஓசூர் அருகே கார் மோதி விபத்து வடமாநில தொழிலாளர் இருவர் பலி
ஓசூர் அருகே கார் மோதி விபத்து வடமாநில தொழிலாளர் இருவர் பலி
ஓசூர் அருகே கார் மோதி விபத்து வடமாநில தொழிலாளர் இருவர் பலி
ADDED : டிச 19, 2024 01:01 AM
ஓசூர், டிச. 19-
ஓசூர் அருகே, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வட மாநில பெண் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஊடேராம் மகள் ஜெயஸ்ரீ யாதவ், 23, மண்டரி மகள் சந்தா பர்மடே, 21, பசந்தகுமார் மகள் மாதுாரி, 24, ராமேஸ்வர் மகன் கரண் சித்தார், 26, மற்றும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சிங் மகள் அஸ்மிதா குமாரி, 24. இவர்கள், 5 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பி.செட்டிப்பள்ளி அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு பணி முடிந்து, அப்பகுதியிலுள்ள தங்களது அறைக்கு செல்ல, தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் நடந்து சென்றனர். பி.செட்டிப்பள்ளி அருகே மாலை, 5:10 மணிக்கு, தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக சென்ற சிவப்பு நிற கார், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், ஜெயஸ்ரீ யாதவ், சந்தா பர்மடே ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த அஸ்மிதா குமாரி, மாதுாரி மற்றும் கரண்சித்தார் ஆகியோர், ஓசூர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கெலமங்கலம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி
வருகின்றனர்.