/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உதயநிதி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
உதயநிதி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : நவ 27, 2024 01:04 AM
உதயநிதி பிறந்தநாள் விழா
நலத்திட்ட உதவி வழங்கல்
பாலக்கோடு, நவ. 27-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழக துணை முதல்வர் உதயநிதியின், 48வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாலக்கோடு, தி.மு.க., கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இன்பசேகரன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா, கிளை செயலாளர் சின்னசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழ், ஒன்றிய அவைத்தலைவர் சிவராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காமராஜ் உள்பட பலர்
பங்கேற்றனர்.