/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : நவ 28, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, நவ. 28-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் பிரியாணி வழங்கி, தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகில் அண்ணாதுரை சிலை எதிரில் அமைக்கப்பட்ட பந்தலில் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 4,800 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதேபோல பர்கூர் பஸ் ஸ்டாண்ட், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், 2,000 பேருக்கு பிரியாணி, ஆட்டோ டிரைவர்கள், தூய்மை நலப்பணியாளர்கள், 300 பேருக்கு சீருடை வழங்கி, தி.மு.க.,கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
நம் மாநிலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி, அத்துறையை முன்னேற்ற அரும்பாடு பட்டு வருகிறார். திறமைமிக்க விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது பிறந்தநாளில், முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல் வரும், 2026 சட்டசபை தேர்தலில், 200 இடங்களுக்கு மேல், தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும் என உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், கே.வி.எஸ்.,சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மூன்றம்பட்டி பஞ்., தளபதி நகரில், மலைவாழ் மக்களுடன், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 200 பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டன.
வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் மாலதி, நகர அவை தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.