/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம்
/
ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம்
ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம்
ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:32 AM
சூளகிரி:
சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், அத்திமுகம், அங்கொண்டப்பள்ளி, செட்டிப்பள்ளி ஆகிய, 3 பஞ்.,க்களில் ஓட்டுச்
சாவடி பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பால
கிருஷ்ணாரெட்டி, பூத் கமிட்டி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர், புதிய பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, தென்பெண்ணை ஆற்றின் கொடியாளம் அணையிலிருந்து, பம்பிங் முறையில் ஏரிகளுக்கு, நீர் நிரப்பும் திட்டத்தை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை என, பூத் கமிட்டி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் குற்றம்
சாட்டினார்.
மேலும், வரும், 2026 சட்டசபை தேர்தலில், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக யார் போட்டியிட்டாலும், ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கேட்டுக்
கொண்டார்.
மாவட்ட பொருளாளர்
மல்லையன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா, முன்னாள் பஞ்., தலைவர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

