/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாகலுார், சூளகிரி, ராயக்கோட்டை டவுன் பஞ்.,களாக தரம் உயர்வு
/
பாகலுார், சூளகிரி, ராயக்கோட்டை டவுன் பஞ்.,களாக தரம் உயர்வு
பாகலுார், சூளகிரி, ராயக்கோட்டை டவுன் பஞ்.,களாக தரம் உயர்வு
பாகலுார், சூளகிரி, ராயக்கோட்டை டவுன் பஞ்.,களாக தரம் உயர்வு
ADDED : ஜன 03, 2025 01:21 AM
ஓசூர், ஜன. 3-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர், சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய உள்ளாட்சி பகுதிகள் டவுன் பஞ்.,களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 டவுன் பஞ்.,கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 3 டவுன் பஞ்.,கள் அமைய உள்ளன.
அதன்படி ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகலூர் டவுன் பஞ்.,ல் பாகலூரும், பெலத்தூர் கிராமத்தில் சூடாபுரம் குடியிருப்பு பகுதிகள் இணைக்கப்பட உள்ளன. சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியத்தில் ராயக்கோட்டை பஞ்.,- டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, சூளகிரி, பாகலூர் ஊராட்சிகளில் டவுன் பஞ்.,கள் தரம் உயர்த்துவது முறைப்படி தொடங்கி வைக்கப்படும். இதன் பிறகு, 3 டவுன் பஞ்.,களுக்கு, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வார்டுகள் வரையறுக்கப்படும்.
ஓசூர் மாநகராட்சியுடன் பேகேப்பள்ளி, நல்லூர், ஒன்னல்வாடி, கொத்தகொண்டப்பள்ளி, பேரண்டப்பள்ளி ஆகிய 5 பஞ்.,கள் முழுமையாகவும், சென்னசந்திரம் பஞ்.,ல் விஸ்வநாதபுரமும், தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,ல் குமுதேப்பள்ளி, காந்தி நகர், எல்லம்மா கொத்தூர் பகுதிகளும் இணைக்கப்பட உள்ளன. அதேபோல கிருஷ்ணகிரி நகராட்சியுடன், அருகில் உள்ள கட்டிகானப்பள்ளி பஞ்., இணைக்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.