/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய தடையை நீக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
/
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய தடையை நீக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய தடையை நீக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய தடையை நீக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
ADDED : ஆக 05, 2025 01:34 AM
ஓசூர், தமிழக எல்லை ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, கடந்தாண்டு ஜூன், 27ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், கர்நாடகாவின் தேவனஹள்ளியிலுள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., சுற்றளவிற்கு வேறு விமான நிலையம் அமைக்கக்கூடாது என, மத்திய அரசுடன் ஒப்பந்தம் உள்ளது. அதனால், ஓசூரில் விமான நிலையம் வராமல் தடுத்து விடலாம் என, கர்நாடகா அரசு நினைக்கிறது.
ஓசூர் அருகே, பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுதளத்துடன் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதி கள், சூளகிரி அருகே உலகம் என இரு இடங்களை, தமிழக அரசு தேர்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், டில்லியில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினார்.
அப்போது, தமிழக அரசு விமான நிலையத்திற்காக தேர்வு செய்த இரு இடங்கள், வான்வெளி பாதுகாப்பு அமைச்சகம் கீழ் வருகிறது. அதனால், விமான நிலையம் நிறுவ, தனி வான் கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு விமான நிலையத்திற்கு ஒரு இடத்தை இறுதி செய்தவுடன், 150 கி.மீ., சுற்றளவிற்குள் விமான நிலையம் வரக்கூடாது என்ற தடையை நீக்கி, அனுமதி வழங்க வேண்டும் என எம்.பி., கோபிநாத் வலியுறுத்தினார்.