/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்களை அதிகளவில் தொழிற்பழகுனராக சேர்க்க தொழில்நிறுவனங்களுக்கு வலியுறுத்தல்

ADDED : மே 23, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களை, தொழில்நிறுவனங்கள், தொழிற்பழகுனராக அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திறன் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 4 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்' குறுகிய கால திறன் பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு, 12,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ப, திறன் பயிற்சி வழங்கவும், தொழிற்பழகுனர் பயிற்சிக்கு, அதிகளவில் மாணவர்களை சேர்த்தும், திறன் பெற்ற பணியாளர்களாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பெரியசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.