/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சொர்க்கவாசல் திறப்பையொட்டி உற்சவர் பெருமாள் நகர்வலம்
/
சொர்க்கவாசல் திறப்பையொட்டி உற்சவர் பெருமாள் நகர்வலம்
சொர்க்கவாசல் திறப்பையொட்டி உற்சவர் பெருமாள் நகர்வலம்
சொர்க்கவாசல் திறப்பையொட்டி உற்சவர் பெருமாள் நகர்வலம்
ADDED : ஜன 01, 2026 07:46 AM

கிருஷ்ணகிரி: சொர்க்கவாசல் வழியாக வந்த, உற்சவ பெருமாள் சுவாமி, நேற்று நகர்வலம் வந்து பக்-தர்களுக்கு அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 'பரமபத வாசல்' என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு, நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. இதையொட்டி, சொர்க்கவாசல் வழியாக வந்த உற்சவ பெருமாளின் நகர்வலம் நேற்று காலை நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதியில் உள்ள நவநீத வேணுகோ-பால சுவாமி கோவிலில், உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பெருமாள் சுவாமி, கருட வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை, ரவுண்டானா, சென்னை சாலை, பெரிய மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும்
கோவிலை வந்தடைந்தது. வழியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நரசிம்ம சுவாமி கோவில், காட்டு வீர
ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில்களில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமே-தராய் பெருமாள் சுவாமி நகர் வலம் வந்து பக்தர்-களுக்கு அருள் பாலித்தார்.
* ஊத்தங்கரை காந்தி ரோட்டிலுள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோவிலில், நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியை-யொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
இதை-யொட்டி நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் பஜனை பாடல்க-ளுடன் திருதேர் வீதி உலா
நடந்தது. இதை ஏராள-மான பக்தர்கள் தரிசித்தனர்.

