/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓராண்டில் சாலை விபத்தில் 699 பேர் பலி 42 பேர் மீது 'குண்டாஸ்' நடவடிக்கை
/
ஓராண்டில் சாலை விபத்தில் 699 பேர் பலி 42 பேர் மீது 'குண்டாஸ்' நடவடிக்கை
ஓராண்டில் சாலை விபத்தில் 699 பேர் பலி 42 பேர் மீது 'குண்டாஸ்' நடவடிக்கை
ஓராண்டில் சாலை விபத்தில் 699 பேர் பலி 42 பேர் மீது 'குண்டாஸ்' நடவடிக்கை
ADDED : ஜன 01, 2026 07:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2025ல் மாவட்டம் முழுவதும் நடந்த சாலை விபத்து-களில், 699 பேர் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2024 ஆண்டை விட கொலை வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் 2025ல், குறைந்துள்ளது. 2024ல், 58
கொலைகள் பதிவாகி இருந்த நிலையில், 2025ல், 50 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, 14 சதவீதம் குறைவு. கடந்த, 2024ல், 42 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2025ல், 37 வழக்-குகள் பதிவாகி உள்ளன. இது, 12 சதவீதம் குறை-வாகும். கடந்த, 2024ல், 28
வழிப்பறி வழக்குகள் பதிவான நிலையில், 2025ல், 19 வழக்குகள் பதி-வாகி உள்ளது. இது, 32 சதவீதம் குறைவாகும். மேலும் குண்டர் சட்டத்தில், 42 பேர் மீது நடவ-டிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 2024ல், 222 திருட்டு வழக்கு பதிவான நிலையில், 2025ல், 209 வழக்குகள் பதிவாகி உள்-ளன. இது, 6 சதவீதம் குறைவாகும். 2024ல், 727 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். போலீ-சாரின் விழிப்புணர்வு நடவடிக்கையால், 2025ம் ஆண்டில் சாலை விபத்துக்கள் குறைந்து பலியா-னவர்களின் எண்ணிக்கை, 699 ஆக குறைந்துள்-ளது. இது, 4 சதவீதம் குறைவாகும். இணைய வழி குற்றம் தொடர்பாக இந்தாண்டு, 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் இழந்த, 30.91 கோடி ரூபாய் முடக்-கப்பட்டு, 1.22 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்-களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில், 27 கொலை வழக்குகள், ஒரு ஆதாய கொலை வழக்கு, 3 கூட்டு கொள்ளை வழக்கு, 2 கொள்ளை வழக்கு, 6 திருட்டு வழக்கு, 8 போக்சோ வழக்கு மற்றும்,
4,708 பிற வழக்குகள் உள்பட மொத்தம், 4,761 வழக்குகளில், உரியவர்-களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இவ்-வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

