/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளம் நுகர்வோருக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
/
இளம் நுகர்வோருக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
ADDED : ஜன 01, 2026 07:47 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதாராணி சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுசெ-யலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் பேசிய-தாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம், நுகர்வோர் பாது-காப்பு சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் நமக்கு தேவையான உரிமைகள் அளித்துள்ளன. இது குறித்து, கல்லுாரி மாணவ, மாணவியர் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க, மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், “கல்லுாரி மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை முறையாக பயன்படுத்தி தக-வல்களை பெற்று கொள்ளலாம். மேலும் நக-ராட்சி, கிராம பகுதிகளில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின் வசதிகள் ஏதேனும் குறை-பாடுகள் இருந்தால், மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தி பலன் பெறலாம்,” என்றார்.

