/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 498 வாகனங்கள் பறிமுதல்
/
கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 498 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜன 01, 2026 07:47 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கி-ணைப்பு குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை தடுக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் போலீசார் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த நவ., டிச., மாதங்களில் கனிம-வள கடத்தலில் ஈடுபட்ட, 47 வாகனங்கள் பறி-முதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்., 2024 முதல் தற்போது வரை, 498 கனங்கள் கைப்பற்றப்பட்டு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், குத்தகை காலம் முடிவுற்ற பின்பும் தொடர்ந்து இயங்கும் குவாரிகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள், சேமிப்பு கிடங்கு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் இயங்கும் கிரஷர்கள் கண்டறியப்பட்டு உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், குவாரி பகுதியில் அனுமதித்த அளவைவிட அதிக ஆழம் வெட்டியெடுப்பதை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்-பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்-டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாத-னைக்குறள், மற்றும் துறை சார்ந்த அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.

