/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சிக்கினார்
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சிக்கினார்
ADDED : அக் 29, 2025 02:27 AM
கிருஷ்ணகிரி: வாரிசு சான்றிதழ் வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போத்தாபுரத்தை சேர்ந்தவர் காசி, 57, முன்னாள் ராணுவ வீரர். இவரது அண்ணன் மகன் கணபதி, நான்கு மாதங்களுக்கு முன் இறந்தார். அவரின் மனைவி லட்சுமி, 42, வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை பெற, அக்., 22ல், சம்பந்தப்பட்ட மிட்டஹள்ளி வி.ஏ.ஓ., ராமநாதனை, காசி சந்தித்துள்ளார்.
அப்போது, ராமநாதன், 5,000 ரூபாய் கொடுத்தால் 'வாரிசு சான்றிதழ் தருகிறேன்' என கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத காசி, இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, ரசாயன பொடி தடவிய பணத்துடன் நேற்று மீண்டும் வி.ஏ.ஓ., ஆபீஸ் சென்று, 5,000 ரூபாய் தன்னிடம் இல்லை, 3,000 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி உள்ளார். 'சரி பரவாயில்லை கொடு' எனக்கூறி, அப்பணத்தை ராமநாதன் வாங்கினார். அப்போது, அவரை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

