/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேவி கருமாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
/
தேவி கருமாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED : ஏப் 21, 2025 07:55 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ராயக்கோட்டை சாலையில், பாரதியார் நகரிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது.
காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், தேவி மூலமந்திரம் ஹோமம், காலை, 11:00 மணிக்கு, கலசபூஜை, அம்மனுக்கு மகா கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது.மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் உட்பட, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு, தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில், முருகர் சன்னதி அமைக்க பூமி பூஜை நடக்க உள்ளது.

