/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரத்தில் கார் மோதி விபத்து வி.சி., கட்சி நிர்வாகி பலி
/
மரத்தில் கார் மோதி விபத்து வி.சி., கட்சி நிர்வாகி பலி
மரத்தில் கார் மோதி விபத்து வி.சி., கட்சி நிர்வாகி பலி
மரத்தில் கார் மோதி விபத்து வி.சி., கட்சி நிர்வாகி பலி
ADDED : செப் 04, 2025 01:18 AM
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி அருகே, மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பலியானார். மேலும்,
3 பேர் படுகாயமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கக்கதாசம் சாந்தி நகரை சேர்ந்தவர் வரதராஜ், 53. விடுதலை சிறுத்தைகள் கட்சி தளி வடக்கு ஒன்றிய செயலாளர்; இவரும், தேன்கனிக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ரமேஷ், 53, தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சிவக்குமார், 30, அந்தேவனப்பள்ளியை சேர்ந்த அஸ்வத், 45, ஆகியோர் நண்பர்கள். இவர்கள், 4 பேரும் நேற்று காலை ஒகேனக்கல் சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் தேன்கனிக்கோட்டை நோக்கி, மாருதி சென் காரில் வந்தனர். அஸ்வத் காரை ஓட்டினார்.
ஒகேனக்கல் - நாட்றாம்
பாளையம் சாலையிலுள்ள கத்திரிப்பள்ளம் பகுதியில் மாலை, 4:30 மணிக்கு வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், இடதுபுற சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில், காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த வரத ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். ரமேஷ், சிவக்குமார், அஸ்வத் ஆகியோர் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.