ADDED : டிச 21, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி வி.சி., கட்சி சார்பில், ஓசூர் காந்தி சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி பார்லி., தொகுதி செயலாளர் செந்தமிழ் கண்டன கோஷம் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்ட கட்சியினர், எம்.ஜி., ரோட்டில் சிறிது துாரம் ஊர்வலமாக சென்று, தபால் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, அவரது உருவப்-படத்தை தீயிட்டு கொளுத்தினர்.