/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளி முடிந்து கர்நாடகா திரும்பும் மக்கள் பாலம் மீது எதிர்திசையில் வாகன அனுமதி
/
தீபாவளி முடிந்து கர்நாடகா திரும்பும் மக்கள் பாலம் மீது எதிர்திசையில் வாகன அனுமதி
தீபாவளி முடிந்து கர்நாடகா திரும்பும் மக்கள் பாலம் மீது எதிர்திசையில் வாகன அனுமதி
தீபாவளி முடிந்து கர்நாடகா திரும்பும் மக்கள் பாலம் மீது எதிர்திசையில் வாகன அனுமதி
ADDED : அக் 23, 2025 01:16 AM
ஓசூர், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே சிப்காட் ஜங்ஷன் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதில், பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பாதையில் மட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, அவ்வழியாக கடந்த, 18ம் தேதி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாதையில் பாலம் பணிகள் முடியவில்லை. அதனால், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்கின்றன. பாலத்தின் ஒருபாதை திறக்கப்பட்டதால், கர்நாடகாவிலிருந்து தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கார், பஸ், போன்ற வாகனங்களில் சென்ற மக்கள், பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சென்றனர்.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், கர்நாடகாவிற்கு தமிழக மக்கள் திரும்புகின்றனர். ஆனால், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாதையில் பாலம் பணிகள் முடியவில்லை. அதனால், பெங்களூரு திரும்பும் வாகனங்களால், இ.எஸ்.ஐ., சந்திப்பு மற்றும் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதனால், பெங்களூரு நோக்கி சென்ற வாகனங்களை, பாலம் பணி முடிந்த பாதையின் வழியாக எதிர் திசையில் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் திரும்பி விட்டனர்.
மேலும், பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், பாலத்தில் அனுமதிக்கப் படாமல், சர்வீஸ் சாலையில் செல்ல அறிவுறுத்தினர். நேற்றும் அதே நடைமுறையில் வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனால், இ.எஸ்.ஐ., சந்திப்பு மற்றும் சிப்காட் ஜங்ஷன் சர்வீஸ் சாலையில் சற்று போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது.