/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாங்கண்ணி பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
/
வேளாங்கண்ணி பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
வேளாங்கண்ணி பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
வேளாங்கண்ணி பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ADDED : நவ 20, 2024 01:45 AM
வேளாங்கண்ணி பள்ளி சாரண, சாரணிய
மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஓசூர், நவ. 20-
ஓசூர், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சாரண, சாரணிய இயக்கம், நடப்பாண்டிற்கான சேவை பணிகளில் சிறப்பாக செயல்பட்டது. அதனால், தமிழகத்தில் இருந்து இப்பள்ளி மட்டும், தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளியின் சாரண, சாரணிய இயக்கத்திலுள்ள, 7ம் வகுப்பு மாணவர் பிரனீத், 9ம் வகுப்பு மாணவன் நாவரசு, 8ம் வகுப்பு மாணவி ஜனனி, 6ம் வகுப்பு மாணவி ரோஷினி மற்றும் பள்ளி முதல்வர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் கணேசன், நிவேதா, அம்பிகா, பவ்யா ஆகிய, 9 பேர், டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடந்த, குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றனர்.
மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஓசூர் திரும்பிய மாணவ, மாணவியர் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்களை, வேளாங்கண்ணி பள்ளிகள் குழும தலைவர் தம்பிதுரை எம்.பி., அறங்காவலர் லாசியா தம்பிதுரை ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தாளாளர் கூத்தரசன், அதியமான் கல்லுாரி மேலாளர் நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர். வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியுடன் சேர்த்து மொத்தம், 83 பள்ளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தன என்பது, குறிப்பிடத்தக்கது.