/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வை கண்டித்து வி.எச்.பி., தேங்காய் உடைத்து போராட்டம்
/
தி.மு.க.,வை கண்டித்து வி.எச்.பி., தேங்காய் உடைத்து போராட்டம்
தி.மு.க.,வை கண்டித்து வி.எச்.பி., தேங்காய் உடைத்து போராட்டம்
தி.மு.க.,வை கண்டித்து வி.எச்.பி., தேங்காய் உடைத்து போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:39 AM
ஓசூர்: திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்துாணில், தீபம் ஏற்றுவது குறித்து, தி.மு.க., அரசு, ஹிந்து மக்க-ளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், உட-னடியாக தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவில் முன் நேற்று போராட்டம் நடந்தது. முன்னதாக முருகன் கோவிலில், தி.மு.க., அர-சிற்கு முருகன் நல்ல அறிவு கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, பூஜைகள் செய்தனர். பின் கோவில் நுழைவாயில் முன், கந்த சஷ்டிக-வசம் படித்தனர்.
அதன் பின், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத், வட தமிழக மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண், மாவட்ட தலைவர் சாந்தகுமார், செய-லாளர் மஞ்சுநாத், இணை செயலாளர் மஞ்சுநாத் உட்பட பலர், 108 தேங்காய்களை தரையில் உடைத்து, தி.மு.க., அரசு, தோல்வியடைந்து விட்டதாகவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பிரதிபலனை, தி.மு.க., வரும், 2026 சட்டசபை தேர்தலில் அனுபவிக்கும் எனவும், கோஷங்கள் எழுப்பினர்.

