/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு
/
அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு
அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு
அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு
ADDED : டிச 23, 2025 06:01 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகளை மூட வேண்டுமென, விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் அந்த அமைப்பினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கிரானைட் மற்றும் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை எடுக்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு மாவட்டத்தின் வருவாய்க்காக புதிய கல் குவாரிகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. மேலும், மலைகளில் இருந்து, வெட்டி எடுக்கப்படும் பாறைகள், தன்னை சமன்படுத்தி கொள்ள நகரும் அபாயம் உள்ளது. இதனால், மாவட்டம் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, மாவட்டத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரி களை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

