/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விஜய்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விஜய்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விஜய்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விஜய்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 26, 2025 01:06 AM
தர்மபுரி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வனக்காப்பாளர், தட்டச்சர் போன்ற பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தர்மபுரி விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி மாணவர்கள், 16 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகாடமி தொடங்கிய முதல் ஆண்டிலேயே சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அகாடமி தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சிவஞானம் பங்கேற்று, மாணவர்களை பாராட்டி பேசினார். அகாடமி ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.
அகாடமியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும், 27 முதல், 31 வரை புதிய வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில், 50 சதவீத சலுகையும், குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படும். இதேபோன்று டெட் தாள் 1 மற்றும் 2-க்கான பயிற்சி வகுப்பு நவம்பரில் தொடங்க உள்ளோம். பயிற்சி கட்டண சலுகைக்கான தேர்வு நவ., 1, 2 தேதிகளில் நடக்கிறது என, நிறுவனத்தின் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

