/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்; மக்களை நிற்க வைத்து அமர்ந்து பேசிய தாசில்தார்

ADDED : ஏப் 16, 2024 07:06 AM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துகோட்டை பஞ்.,ல், ஏணிபண்டா, வீரசெட்டி ஏரி, ஓசஹள்ளி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு ரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், 60 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேலான அரசு புறம்போக்கு நிலங்களை சுவாதீனம் செய்து, விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, 24ல் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, குந்துக்கோட்டை பஞ்., மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பூத் சிலிப்பை வாங்க மக்கள் மறுத்த நிலையில், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், நேற்று சென்று வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு மக்களை அழைத்து பேசினார். மக்களுக்கு அமர்வதற்கு கூட இருக்கை போடாமல், தாசில்தார் மட்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, 10 நிமிடத்திற்கு மேலாக, மக்களை நிற்க வைத்தே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இறுதியில் பட்டா வழங்கும் வரை போராட்டம் தொடரும் என, மக்கள் கூறிச்சென்றனர்.இது குறித்து தாசில்தார் பரிமேலழகரிடம் கேட்டபோது, ''தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் அனைவரையும் அமர வைத்திருப்போம். வி.ஏ.ஓ., அலுவலகமே மிகவும் சிறியது. அங்கு இருக்கை போட இடமில்லை. மக்களை, 10 நிமிடம் கூட நிற்க வைக்கவில்லை,'' என்றார்.