/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேறிடத்தில் கோவில் கட்டும் பணிக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு
/
வேறிடத்தில் கோவில் கட்டும் பணிக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு
வேறிடத்தில் கோவில் கட்டும் பணிக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு
வேறிடத்தில் கோவில் கட்டும் பணிக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு
ADDED : ஏப் 29, 2025 01:58 AM
கிருஷ்ணகிரி:கோவிலை புனரமைப்பதாக கூறி, மாற்றிடத்தில் திரவுபதி அம்மன் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி அடுத்த கொண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட தானம்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
எங்கள் பகுதியில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள், விசேஷ நாட்களில் பூஜை நடப்பது வழக்கம். இக்கோவிலை, புனரமைக்க ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பணிகளை துவக்கினோம். இதில், ஊர் பெரியவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, அதேபகுதியில் உள்ள தானம்பட்டி ராமசாமி பெருமாள் கோவிலுக்கு அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில், திரவுபதி அம்மன் கோவில் புதிதாக கட்ட, சிலர் மட்டும் முடிவு செய்தனர். இதில், பொதுமக்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை. கடந்த, 50 ஆண்டு காலமாக திருவிழா நடந்த பழைய இடத்திலுள்ள கோவிலை புனரமைத்து அங்கேயே திரவுபதி அம்மன் கோவில் இருக்க வேண்டுமென, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். எனவே மாற்றிடத்தில் கோவில் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

