/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒன்றை யானை உலாவால் பீதியில் பையூர் கிராம மக்கள்
/
ஒன்றை யானை உலாவால் பீதியில் பையூர் கிராம மக்கள்
ADDED : நவ 08, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் பஞ்., பையூர் கிராமத்தில், நேற்று காலை, 6:30 மணிக்கு, வனத்துறை அலுவலகம் வழியாக ஒன்றை யானை கிராமத்திற்குள் புகுந்து உலா வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கூறியதாவது: வனத்துறை அலுவலகம் வழியாக வந்த ஒற்றை யானையால் அச்சுறுத்தல் உள்ளதால், விவசாயிகள் பீதியும், வேதனையும் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சித்ரமதொட்டி கிராம பகுதியில், தளி அருகில், பல ஏக்கரில் ராகி, நெல், சோளம், அவரை, கடுகு உள்ளிட்ட பயிர்களை இந்த ஒற்றை யானை சேதப்படுத்தி உள்ளது. இதனால் வனத்துறை அலுவலர்கள் மீது, விவசாயிகள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுத்து, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, சூளகிரி, சானமாவு, உள்ளட்டி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை கட்டுப்படுத்த, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

