/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
/
இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ADDED : அக் 15, 2024 07:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சிக்க பூவத்தி, மூங்கில்பட்டியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:மூங்கில்பட்டி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்களாகிய எங்களுக்கு கடந்த, 1979ல் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு அதில், 1995ல் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், மனைதாரர்களுக்கான பட்டா இன்னும் வழங்கப்படவில்லை. இதே பகுதியில் மேலும், 69 குடும்பத்தினர் இருக்க இடமில்லாமல் தவித்து வருகிறோம்.
எனவே, அனைவருக்கும் புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கி வீடுகள் கட்டித்தரவும், வீட்டு மனை பட்டாக்கள் வழங்கவும் வேண்டும். எங்கள் பகுதியில் இறந்தவர்களை புதைக்க சுடுகாடு இல்லை. அங்கன்வாடி பள்ளி, மொபைல் டவர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.