/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு வருகை இ.பி.எஸ்., சுற்றுப்பயண ஏற்பாடுகள் ஆய்வு
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு வருகை இ.பி.எஸ்., சுற்றுப்பயண ஏற்பாடுகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு வருகை இ.பி.எஸ்., சுற்றுப்பயண ஏற்பாடுகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு வருகை இ.பி.எஸ்., சுற்றுப்பயண ஏற்பாடுகள் ஆய்வு
ADDED : ஆக 11, 2025 08:01 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று (ஆக.11) மாலை முதல் இரவு வரை, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி பகுதிகளில் பிரசாரம் செய்யும் இ.பி.எஸ்., நாளை (ஆக.12) ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும், தொழில் முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், வணிகர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், தனியார் பள்ளி பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பி துரை நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது, மாற்று கட்சி யில் இருந்து விலகிய, 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அதேபோல், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தலைமையிலும் ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, தொகுதி பொறுப்பாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் மதன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், கவுன்சிலர் குபேரன், பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன், மஞ்சுநாத், அசோகா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட பொருளாளர் திம்மராஜ், முன்னாள் கவுன்சிலர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.தளி சட்டசபை தொகுதியில், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மத்திய ஒன்றிய செயலாளர் முனிரெட்டி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ராமமூர்த்தி, செயலாளர் நாகேஷ், பேரூர் செயலாளர்
பழனிசாமி ஆகியோர் ஏற்பாட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.