/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாகலுார் சாலை திட்டப்பணி துவங்க தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு
/
பாகலுார் சாலை திட்டப்பணி துவங்க தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு
பாகலுார் சாலை திட்டப்பணி துவங்க தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு
பாகலுார் சாலை திட்டப்பணி துவங்க தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு
ADDED : ஏப் 27, 2025 03:53 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள, பாகலுார் சாலை வழியாக தினமும், 35,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஓசூர் ஜி.ஆர்.டி., அருகிலிருந்து துவங்கும் இச்சாலை, கே.சி.சி., நகர் அருகே உள்ள பாலம் வரை, 2 கி.மீ., துாரம் குண்டும், குழியுமாக மோச-மான நிலையில் உள்ளது. கர்நாடகா மாநிலம், மாலுார் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் இச்சாலையில்தான் பயணிக்கின்றன. இதனால், ஓசூர் நகருக்குள் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த, 2018 - 19ல் பாகலுார் சாலையை விரிவாக்கம் செய்ய,
மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
இப்பணியை மேற்கொள்ள, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், குறிப்பிட்ட அளவு மட்டுமே பணியை செய்து விட்டு, முடியாமல் அப்படியே கைவிட்டார். அதனால், 10 கோடி ரூபாய் மதிப்பில் மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த, 15ம் தேதி பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், போக்குவ-ரத்தை மாற்றியமைப்பது குறித்து, ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா தலைமையில் கடந்த, 9ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் அறிவிக்கப்பட்டது போல் சாலை பணிகள் துவங்கப்பட-வில்லை. அதனால், வழக்கம்போல் குண்டும், குழியுமான சாலையில் உயிரை பணயம் வைத்து, வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இது குறித்து, தேசிய நெடுஞ்
சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க ஒப்புதல் பெற, தமிழக அரசின் துறை சார்ந்த அனுமதிக்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனு-மதி கடிதம் கிடைத்தவுடன் பணி துவங்கப்படும். பாகலுார் சாலையில் நான்கு இடங்களில் சாலையின் குறுக்கே கழிவு நீர் செல்ல கல்வெட்டுகள் அமைக்கப்பட உள்ளன. அதனால் முதல் இரு மாதங்களுக்கு, கார், இருசக்கர வாகனங்களை மட்டும் அனு-மதிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். லாரி போன்ற கனரக வாகனங்கள் மட்டும் மாற்றுப்
பாதையில் பாகலுார் செல்ல ஏற்பாடு
கள் செய்யப்பட்டு வருகின்றன. மே முதல் அல்லது, 2வது வாரத்தில் தான் பாகலுார் சாலை பணிகள் துவங்கும் வாய்ப்புள்-ளது' என்றனர்.