/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுவர் விளம்பரங்கள்; தி.மு.க.,வினருக்கு வேண்டுகோள்
/
சுவர் விளம்பரங்கள்; தி.மு.க.,வினருக்கு வேண்டுகோள்
ADDED : ஏப் 13, 2025 05:21 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர், வேப்-பனஹள்ளி, தளி சட்டசபை தொகுதி பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்த-லைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர செய-லாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தனர். வேப்பனஹள்ளி தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம், ஓசூர் தொகுதி பொறுப்-பாளர் வடிவேல் ஆகியோர், பூத் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர்.
தொடர்ந்து, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்து பேசும் போது, சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 9 மாதங்கள் தான் உள்ளன. தி.மு.க., ஆட்சியின் வளர்ச்சி திட்-டங்கள், மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தி.மு.க.,விற்கு மக்கள் ஆதரவை பெற வேண்டும். ஓசூர், வேப்ப-னஹள்ளி, தளி தொகுதியில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். கட்சியினர் தங்களது வீட்டு சுவர்களில், 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என, சுவர் விளம்-பரம் செய்ய கேட்டுக்கொண்டார்.
மாவட்ட பொருளாளர் சுகுமார், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன், தேன்கனிக்-கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.