/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் கழிவுகள் அகற்றம்
/
கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் கழிவுகள் அகற்றம்
ADDED : மே 29, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி, காந்தி சாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டு, படுக்கைகள் சீர் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி, காந்திசாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் கழிவுகள் அள்ளப்படாமலும், படுக்கைகள் பராமரிப்பின்றியும் கிடந்த செய்தி, காலைக்கதிர் நாளிதழில் கடந்த, 25ல் படத்துடன் வெளியானது.
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கழிவுகள் அகற்றப்பட்டு, படுக்கைகளும் சரிசெய்யப்பட்டன.இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு, மருத்துவக்கழிவுகள் முறையாக தினமும் அகற்றப்படுகிறது. அதேபோல பழுதாகி வெளியில் போடப்பட்ட படுக்கைகளை சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, காந்தி சாலை அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவு மட்டுமின்றி, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, குருதி வங்கி உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.