/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ் ஸ்டாண்ட் முன் தேங்கும் கழிவு நீர்
/
பஸ் ஸ்டாண்ட் முன் தேங்கும் கழிவு நீர்
ADDED : ஜன 16, 2024 10:40 AM
ஓசூர்: ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் முன் தேங்கும் கழிவு நீரால், பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகின்றன. தினமும் பல நுாற்றுக்கணக்கான பயணிகள் ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். தர்மபுரியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்தில், கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
அதன் மீது தான் பஸ்கள் சென்று வருகின்றன. பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பயணிகள், நுழைவாயிலில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மீது தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மேலும், பஸ்கள் வேகமாக செல்லும்போது, சாலையில் நடந்து செல்லும் பயணிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட் முன்
கழிவுநீர் தேங்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.