/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9,500 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9,500 கன அடியாக சரிவு
ADDED : ஆக 10, 2025 01:31 AM
ஒகேனக்கல், ஆக. 10
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 9,500 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையால், கர்நாடக அணை
களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,350 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 6,582 கன அடி என மொத்தம், 11,932 கன அடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம், 5:00 மணிக்கு வினாடிக்கு, 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 9,500 கன அடியாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்து, சீராக ஆர்ப்பரித்து கொட்டியது.