/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
/
கி.கிரி கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
கி.கிரி கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
கி.கிரி கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
ADDED : செப் 16, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு, மழையின்றி நீர்வரத்து வேகமாக குறைந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழையின்றி நீர்வரத்து வேகமாக சரிந்து வருகிறது. கடந்த, 11ல் அணைக்கு விநாடிக்கு, 2,195 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம், 1,235 கன அடியாகவும், நேற்று, 1,017 கன அடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 1,017 கனஅடி என மொத்தம், 1,196 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது.
அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.65 அடியாக நீர்மட்டம் இருந்தது. கிருஷ்ணகிரியில் கடந்த, 3 நாட்களாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணை பகுதியில், 5.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
ஊத்தங்கரை பாம்பாறு அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 19.60 அடியில் நேற்று, 9.02 அடியாக இருந்தது. சூளகிரி சின்னாறு அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 32.80 அடியில், 2.89 அடியாக நீர்மட்டம் இருந்தது. இரு அணைக்கும் நீர்வரத்தும் இல்லை.
நீர்திறப்பும் இல்லை. பாரூர் ஏரி நீண்ட நாட்களாக தனது முழு கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 41 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.