/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு
/
கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு
கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு
கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து இன்று (ஜூலை 16) முதல், முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் இருந்து இன்று (ஜூலை 16) முதல், வரும் நவ., 2 வரை, 120 நாட்கள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கே.ஆர்.பி., அணையில் இருந்து, இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
]