/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு
/
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : அக் 25, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,371 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை நீர்வரத்து, 1,184 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,184 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தது.
ரசாயன நுரையுடன் ஆற்றில் வெள்ளம்
கரைபுரண்டு ஓடியது.

