/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,644 கனஅடியாக நீடிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,644 கனஅடியாக நீடிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,644 கனஅடியாக நீடிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,644 கனஅடியாக நீடிப்பு
ADDED : டிச 07, 2024 07:24 AM
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யா-ததால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்-தினம், 680 கன அடியாக வந்த நீர்வரத்து நேற்று, 495 கனஅடி-யாக சரிந்தது.
அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில் நேற்று, 41.16 அடி-யாக நீர்மட்டம் உள்ளதால், நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறக்-கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்து
கொண்டிருக்கிறது. அதன்படி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து நேற்று இரண்டாவது நாளாக, 1,644 கனஅடியாக நீடித்தது.
அணையின் கீழ் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அணையின் இரண்டு சிறிய மதகின் மூலம், 1,644 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும், பாரூர் ஏரிக்கு நேற்று முன்தினம், 185 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 140 கனஅடியாக சரிந்தது.
ஏரியின் முழு கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், நீர்வரத்து முழுவதும் கால்வாய்கள் வழியாக
இணைப்பு ஏரிகளுக்கு செல்கிறது.ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம், 2,400 கன-அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 1,726 கனஅடியாக சரிந்தது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 17.78 அடியாக நீர்மட்டம்
உள்-ளதால், அணை பாதுகாப்பு கருதி, நீர்வரத்து முழுவதும் ஐந்து ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டுள்-ளது.