/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த மாதம், 27ல், 313 கன அடியாக நீர்வரத்து இருந்தது. பின்னர் மழையின்றி, 28 முதல், 204 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அன்று முதல் தொடர்ந்து, 17 நாட்களாக அணைக்கு நீர்வரத்து, 204 கன அடியாகவும், நீர்திறப்பு, 204 கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 3 நாட்களாக, 621 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, 591 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 192 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றிலும், கால்வாயில், 12 கன அடி என மொத்தம், 204 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 51.25 அடியாக உயர்ந்துள்ளது.