/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாசன வாய்க்காலில் நீர் திறப்பு விவசாய நிலங்களில் தேக்கம்
/
பாசன வாய்க்காலில் நீர் திறப்பு விவசாய நிலங்களில் தேக்கம்
பாசன வாய்க்காலில் நீர் திறப்பு விவசாய நிலங்களில் தேக்கம்
பாசன வாய்க்காலில் நீர் திறப்பு விவசாய நிலங்களில் தேக்கம்
ADDED : மே 08, 2024 05:11 AM
ஓசூர் : சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஆலியாளம் அணைக்கட்டில் இருந்து, பாத்தக்கோட்டா வழியாக கனஜூர் வரை, 8.80 கி.மீ., துாரத்திற்கு வலதுபுற வாய்க்கால் செல்கிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் சென்றதால் ஆண்டு முழுவதும், 1,500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்தது. வாய்க்காலின் கரைகளை கான்கிரீட் சுவர் அமைத்து பலப்படுத்தும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடக்கிறது. அதனால், வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறின. தற்போது கோடை வெயிலால், வாய்க்கால் பாசனத்தை நம்பியிருந்த விவசாய நிலங்களில் இருந்த தென்னை மரங்கள் உட்பட அனைத்தும் கருக துவங்கின. அதனால், வாய்க்காலில் நீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். வாய்க்கால் பணி முழுமை பெறாத நிலையில், கடந்த மாதம், 15ல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான தண்ணீர் ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலில் திறக்கப்பட்டது. வாய்க்கால் பணி முழுமை பெறாததால், யாகனப்பள்ளி கிராமம் அருகே ஆங்காங்கு வாய்க்காலின் மண் கரைகளில் உடைப்பால், விவசாய நிலங்களில் அணை நீர் தேங்கியது. ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் தென்பெண்ணை ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. மற்றொருபுறம் விவசாய தேவைக்கு சரியான அளவில் தண்ணீரை வாய்க்காலில் திறந்து விடாமல் கூடுதலாக திறந்து விட்டதால், தென்பெண்ணை ஆற்றில் செல்ல வேண்டிய உபரி நீர், வீணாக விவசாய நிலங்களில் தேங்கி வருகிறது.

