/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
ADDED : டிச 15, 2025 07:33 AM
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து கூடும் என்-பதால், நேற்று அணையில் நீர்திறப்பை அதிகரித்-துள்ளனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த மாதம், 24 முதல் நேற்று முன்தினம் வரை, 19 நாட்களாக வினாடிக்கு, 563 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம், 50 அடியாக உள்-ளதால், அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப் பட்டுள்-ளது. மாவட்டத்தில் கடந்த, 20 நாட்களாக மழை இல்லாத காரணத்தில் கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து, 420 கன அடியாக குறைந்தது. ஆனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து, 624 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 891 கன அடியாக அதி-கரித்துள்ளது.
இதனால் கே.ஆர்.பி., அணைக்கும் நீர்வரத்து அதி-கரிக்கக்கூடும் என்பதால், நேற்று கே.ஆர்.பி., அணையில் இருந்து, 586 கன அடி நீர் தென்-பெண்ணை ஆற்றிலும், 186 கன அடி நீர் பாசன கால்வாயிலம் என மொத்தம், 772 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.15 அடியாக இருந்தது.

