/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
ADDED : மே 19, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்-களாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த வாரத்தில் நீர்வரத்து வினாடிக்கு, 548 கன அடி-யாக இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன், 1,152 கன அடியாக அதிகரித்தது.
நேற்று நீர்வரத்து, 999 கன அடியாகவும், அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில் நீர்மட்டம், 50.20 அடியாகவும் உள்-ளது. இதையடுத்து, அணையிலிருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் வினாடிக்கு, 1,062 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் நுரை பொங்க சீறி பாய்ந்து செல்லும் தண்ணீர், சின்னமுத்துார், காவேரிப் பட்டணம், பெண்ணேஸ்வர மடம் வழியாக, நெடுங்கல் தடுப்பணைக்கு செல்கிறது. நெடுங்கல் தடுப்பணையிலிருந்து பாரூர் ஏரிக்கு கால்வாய் வழி-யாக தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரிக்கு நேற்று நீர்வரத்து, 190 கன அடியாக இருந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 15.60 அடியில் நீர்மட்டம், 15.40 அடியாக உள்ளது. சின்னாறு, பாம்பாறு அணைகளுக்கு நீர்-வரத்து ஜீரோ நிலையில் தொடர்கிறது. இதில், பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான, 19.60 அடியில் நீர்மட்டம், 11.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசன கால்-வாயில், 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவான, 32.80 அடியில் நீர்மட்டம் 10.37 அடியாக உள்ளது.