/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 26, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த, 25 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் பரவலான மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 1,151 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 957 கன அடியாக குறைந்தது.
நேற்று முன்தினம் அணையில் இருந்து, 847 கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர் நீர்வரத்தால், நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதாலும் நேற்று அணை மதகு மூலம், 840 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.10 அடியாக இருந்தது.